சிறந்த காற்பந்து ஆட்டக்காரராக வார்டி தேர்வு

லண்டன்: இவ்வாண்டின் சிறந்த காற்பந்து ஆட்டக்காரராக லெஸ்டர் சிட்டியின் ஜேமி வார்டியைக் (படம்) காற்பந்துச் செய்தியாளர்கள் சங்கம் தேர்வு செய்துள்ளது. 29 வயது வார்டி தமது குழுவுக்காக இப்பருவத்துக்கான லீக் ஆட்டங்களில் மொத்தம் 22 கோல்களைப் போட்டுள்ளார். இவ்வாண்டுக்கான லீக் போட்டி தொடங்கியபோது லெஸ் டர் சிட்டி லீக் பட்டியலில் முன்னிலை வகித்துப் பட்டத் துக்காகப் போட்டியிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லெஸ்டர் சிட்டி லீக் பட்டத்தை நெருங்குவதற்கு வார்டியின் பங்கு இன்றியமையாதது.

லெஸ்டர் சிட்டிக்கு விளை யாடுவதற்கு முன்பு ஸ்டோக்ஸ் பிரிட்ஜ், ஹெலிஃபேக்ஸ், ஃப்லீட்வுட் எனப் பிரபலமற்ற குழுக்களுக்காக வார்டி விளையாடினார். படிப்படியாக உயர்ந்து தற் போது பிரிமியர் லீக்கில் விளையாடும் வார்டி, தொடர்ந்து 11 பிரிமியர் லீக் ஆட்டங்களில் கோல் போட்ட முதல் வீரர் எனும் பெருமையை இப்பருவத்தில் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். "இப்பருவத்தில் லெஸ்டர் லீக் பட்டத்தை வென்று மகுடம் சூடினால் தொடர்ந்து 11 ஆட்டங்களில் வார்டி கோல் போட்டு சாதனை படைத்தது அந்த மகுடத்தில் பதிக்கப்படும் ரத்தினத்துக்குச் சமமாகும்," என்று காற்பந்துச் செய்தி யாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆண்டி டன் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான சிறந்த காற்பந்து ஆட்டக்காரரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற வாக்கெடுப்பில் 36 விழுக்காடு வாக்குகளை வார்டி பெற்றார். இந்த விருதைப் பெறும் முதல் லெஸ்டர் சிட்டி வீரர் என்ற பெருமை வார்டியைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!