சமநிலை கண்ட யுனைடெட்-=லெஸ்டர்சிட்டி

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கும் லெஸ்டர் சிட்டிக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் லீக் பட்டம் தனக்கே சொந்தம் என்ற நிலையில் முனைப் புடன் லெஸ்டர் களமிறங்கியது. ஆனால் ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே யுனைடெட் கோல் போட்டு லெஸ்டர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

லெஸ்டரின் கோல் எல்லைக்குள் பந்து அனுப்பப்பட்டது. யுனைடெட் குழுவின் அண்டனி மார்ஷலுக்கு நெருக்கடி கொடுக்க லெஸ்டர் தற்காப்பு ஆட்டக்காரர்கள் தவறி னர். இதன் விளைவாக தம்மிடம் வந்த பந்தைச் சிரமமின்றி வலைக்குள் மார்ஷல் சேர்த்தார். லீக் பட்டத்தை வெல்லும் கனவு கலைந்துவிடுமோ என்ற கலக் கத்துடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர் லெஸ்டர் அணியினர். கோல் போட்ட முனைப்பில் யுனைடெட் மீண்டும் தாக்கு தல்களில் இறங்கியது.

லெஸ்டரின் கோல்காப்பாளர் கேஸ்பர் ஷெமைக்கல் மட்டும் வலை நோக்கி வந்த பந்தைத் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந் தால் லெஸ்டரின் கதை முடிந் திருக்கும். இந்நிலையில், ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் லெஸ்டருக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிட்டியது. டேனி டிரிங்க்வாட்டர் அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி கோலாக்கினார் லெஸ்டரின் அணித் தலைவர் வெஸ் மோர்கன். இக்கட்டான நிலையில் அணித் தலைவர் என்கிற முறையில் மோர்கன் தமது கடமையைச் செய்தார்.

ஃப்ரீகிக் வாய்ப்பு மூலம் வந்த பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பும் லெஸ்டர் அணித் தலைவர் வெஸ் மோர்கன் (வலமிருந்து இரண்டாவது). மோர்கன் கோல் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்துவதை யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர்களாலும் கோல்காப்பாளர் டேவிட் டி கியாவாலும் தடுக்க முடியவில்லை. இந்த கோல் லெஸ்டருக்கு விலைமதிக்க முடியா புள்ளியைத் தந்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!