இறுதிப் போட்டியில் அட்லெட்டிகோ

மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட் குழு தகுதி பெற்றுள்ளது. அண்மையில் சொந்த மண் ணில் பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக் கான முதல் சுற்றில் 1=0 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ வென்றிருந்தது. இந்நிலையில், பயர்ன் மியூனிக் கின் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இரண்டாம் சுற்று ஆட்டம் நடைபெற்றது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இதில் 2=1 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ தோல்வி அடைந்தது. ஒட்டுமொத்த கோல் எண் ணிக்கை 2=2 என்றபோதிலும் எதிரணியின் அரங்கில் கூடுதல் கோல் போட்டதன் அடிப்படையில் அட்லெட்டிகோ இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கடந்த மூன்று பருவங்களில் அட்லெட்டிகோ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது இதுவே இரண் டாவது முறை. ஒட்டுமொத்த கோல் அடிப்படை யில் ஒரு கோல் முன்னிலை வகித்து இரண்டாம் சுற்று ஆட்டத்தை அட்லெட்டிகோ தொடங்கியது. ஆட்டத்தை எப்படியாவது சமப்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய பயர்ன் மியூனிக்கின் முயற்சிகளுக்கு 31வது நிமிடத்தில் கை மேல் பலன் கிட்டியது.

பந்தைத் தலையால் முட்டி பயர்ன் மியூனிக்கின் இரண்டாவது கோலைப் போடும் ராபர்ட் லெவன்டாவ்ஸ்கி (நடுவில்). இந்த கோல் அரையிறுதிக்கான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பயர்ன் மியூனிக்கின் வெற்றி கோலாக அமைந்தது. இருப்பினும், அட்லெட்டிகோ மட்ரிட் இறுதிப் போட்டிக்குள் நுழைவதைத் தடுக்க இந்த கோல் போதுமானதாக இல்லை. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!