உலக சாதனை தகர்ப்பு

லிஸ்பன்: உடற்குறையுள்ளோருக் கான ஐரோப்பிய வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ (படம்) 100 மீ. பின்நீச்சல் (எஸ்2) பிரிவில் புதிய உலக சாதனை படைத்தார். போர்ச்சுகலின் ஃபுன்ச்சல் நகரில் அப்போட்டிகள் நடந்து வரு கின்றன. அதில், 2008 பெய்ஜிங் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான யிப், 100 மீ. தூரத்தை 2 நிமிடம் 9.79 வினாடி களில் மல்லாந்து நீந்திக் கடந்து தங்கத்தைத் தனதாக்கினார்.

முந்தைய சாதனையைவிட கிட்டத்தட்ட ஏழு வினாடிகள் குறைவாகப் பதிவு செய்திருந்தார் யிப். 2014ல் உக்ரேனின் கானா லெலிசவெட்ஸ்கா 2 நிமிடம் 16.31 வினாடிகளை எடுத்துக்கொண் டதே முந்தைய சாதனை. போட்டியின்போது முதல் 50 மீ. தூரத்தைக் கடக்க இவர் எடுத்துக் கொண்ட நேரமும் புதிய உலக சாதனையானது. அந்த தூரத்தை இவர் 1 நிமிடம் 1.39 வினாடிகளில் கடந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லிவர்பூலின் இரண்டாவது கோலை அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ரொபேர்ட்டோ ஃபர்மினோ (இடமிருந்து மூன்றாவது). படம்: ராய்ட்டர்ஸ்

19 Aug 2019

இங்கிலிஷ் பிரிமியர் லீக்: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த லிவர்பூல், ஆர்சனல்

சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் ஆக வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராக கருதப்படும் அவ்ரமோவிச்.

19 Aug 2019

ஹோம் யுனைடெட் குழுவிலிருந்து பதவி விலகிய அவ்ரமோவிச்