80 வயதிலும் ராஜநடை போட்ட ராஜேந்திரன்

இந்தத் தொழில்நுட்ப, நாகரிக உலகில் உடற்தகுதி யின் அவசியம் குறித்து இளையர்கள் பலர் அறிந்திருந்தபோதும் உடற்பயிற்சிக்கும் விளையாட் டிற்கும் அவர்கள் போதிய நேரத்தைச் செலவிடுவது இல்லை என்பதே உண்மை. அதிகரித்து வரும் உடற் பருமன் பிரச்சினையே இதற்குச் சான்று. அத்தகையோருக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் திகழ்கிறார்

தமிழ்நாட்டின் சிவகாசியைச் சேர்ந்த திரு டி.டி.ராஜேந்திரன், 80. நேற்று முன்தினம் சிங்கப்பூரில் தொடங்கிய ஐந்து நாள் ஆசிய மாஸ்டர்ஸ் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 80-84 வயதுப் பிரிவில் 5,000 மீ. தூரத்தை 41 நிமிடம் 14.12 வினாடிகளில் நடந்து கடந்து தங்கம் வென்றார் திரு ராஜேந்திரன். சக போட்டியாளர்கள் எல்லாரும் காலில் ‘‌ஷூ’ அணிந்திருக்க, இவரோ வெறுங்காலுடன் நடை போட்டு வெற்றி நாயகனாக வலம் வந்தார்.

மூலிகை நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்கு நரான இவர், தமது எட்டரை அங்குல கால்களுக்குப் பொருத்தமான ‘‌ஷூ’ கிடைப்பது சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார். “முந்தைய போட்டிகளில் ‘‌ஷூ’ அணிந்துதான் பங்கேற்று வந்தேன். ஆனால், அவை சரியாகப் பொருந்தாததால் கால் நகங்கள் பிய்ந்து போயின. ஆனாலும் பிரச்சினையில்லை. ஏனெனில், ‘‌ஷூ’ இல்லாமல் வெறுங்காலில் நடக்கும்போதுதான் என் னால் வேகமாக நடக்க முடிகிறது,” என்றார் அவர். ஆறு பேரக்குழந்தைகளின் தாத்தாவான இவர், தமது பள்ளிப் பருவத்தில் ‘போல் வால்ட்’ எனப் படும் கழி ஊன்றித் தாண்டும் விளையாட்டில் முயன்று பார்த்தார். அதற்குப் பிந்தைய அவரது இளமைப் பருவம் விளையாட்டுடன் தொடர்பில்லா மலேயே கழிந்தது.

தமது கால்களுக்குப் பொருத்தமான ‘‌ஷூ’ கிடைப்பது சிரமமாக இருப்பதாகக் கூறினார் திரு ராஜேந்திரன். இருப்பினும், ‘‌ஷூ’ அணிந்தால் தமது நடைவேகம் குறைகிறது என்பதால் வெறும் காலுடன் நடப்பதே சௌகரியமாக இருக்கிறது என்றார் அவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்