இறுதிப் போட்டியில் லிவர்பூல்-செவியா

லிவர்பூல்: யூரோப்பா லீக் காற் பந்துத் தொடரின் இறுதி ஆட்டத் தில் 'ஹாட்ரிக்' பட்டம் வெல்லக் காத்திருக்கும் ஸ்பெயினின் செவியா குழுவுடன் லிவர்பூல் குழு மோதவிருக்கிறது. ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கில் நேற்று அதிகாலை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினின் வியாரியால் குழுவை வீழ்த்தியது. முதல் சுற்று அரை இறுதியில் 0-1 எனத் தோற்று இருந்ததால் நேற்றைய ஆட்டத்தில் குறைந்தது இரு கோல்கள் வித்தி யாசத்தில் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் அக்குழு இருந்தது. இந்நிலையில், ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் வியாரியால் குழுத் தலைவர் புருனோ சொந்த கோல் அடித்து லிவர்பூலின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். முற்பாதி ஆட்டம் அந்த ஒரே கோலுடன் முடிய, இரண்டாம் பாதியில் 63வது நிமிடத்தில் கோல் அடித்து லிவர்பூல் முன்னிலையை இரட்டிப்பாக்கினார் நட்சத்திர ஆட்டக்காரர் டேனியல் ஸ்டரிஜ்.

ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருந்தபோது மேலும் ஒரு கோல் விழுந்தது. ஸ்டரிஜ் கடத்திக் கொடுத்த பந்தை அற் புதமாக வலைக்குள் தள்ளினார் ஆடம் லலானா. இதனால், ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையில் 3-1 என முன்னிலை பெற்று இறுதிக்குள் நுழைந்தது லிவர்பூல். 2006-07 சாம்பியன்ஸ் லீக் கிற்குப் பிறகு ஐரோப்பிய அளவி லான தொடர் ஒன்றில் அக்குழு இறுதிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதன்முறை. மற்றோர் அரையிறுதி ஆட்டத் தில் கடந்த இரு பருவங்களில் கிண்ணம் உயர்த்திய செவியா குழு 3-1 என்ற கணக்கில் உக்ரேனின் ஷக்தர் டொனட்ஸ்க் குழுவைத் தோற்கடித்தது. இந்த இரு குழுக்களுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி 2=2 எனச் சமநிலையில் முடிந்திருந்த தால் நேற்றைய ஆட்டத்தில் வென்ற செவியாவிற்கு இறுதிச் சுற்று வாய்ப்பு உறுதியானது. லிவர்பூல்-செவியா இடை யிலான இறுதிப் போட்டி இம்மாதம் 18ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் பெசல் நகரில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை நேரில் காண கிட்டத்தட்ட நூறாயிரம் லிவர்பூல் ரசிகர்கள் சுவிட்சர்லாந் திற்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார் லிவர்பூல் குழு நிர்வாகி யர்கன் க்ளோப். ஆனால், இறுதிப் போட்டி நடைபெறும் பெசல் காற்பந்துக் குழு விளை யாட்டரங்கில் 38,000 பேர்தான் அமர முடியும் என்பதால் அவரது ஆசை நிராசையாவது நிச்சயம்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!