2வது முறை சாதனை படைத்த யிப்

போர்ச்சுகலில் நடைபெற்ற அனைத்துலக உடற்குறை உள்ளோருக்கான ஐரோப்பியப் பொது விருது நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் யிப் பின் சியூ, சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை இரண்டாவது முறையாக சாதனை படைத்தார். உடற்குறையுள்ள மகளிருக் கான 50 மீட்டர் மல்லாந்து நீச்சல் போட்டியில் யிப் தமது சாதனை நேரத்தை முறியடித்தது மட்டுமல்லாது தங்கப் பதக்கத் தையும் வென்றார். இந்தப் போட்டியில் அவர் தங்கம் வென்றிருப்பது இது இரண்டாவது முறை. கடந்த புதன்கிழமையன்று அவர் 100 மீட்டர் மல்லாந்து நீச்சல் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். போட்டியில் சாதனை படைத்துள்ள யிப்புக்கும் அவரது சக வீராங்கனை திரேசா கோ வுக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் வழியாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

50, 100 மீட்டர் மல்லாந்து நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள சிங்கப்பூர் வீராங்கனை யிப் பின் சியூ. 50 மீட்டர் மல்லாந்து நீச்சல் போட்டியில் இவர் சாதனை நேரம் படைத்தார். படம்: காங் சீ வெய்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்