மான்செஸ்டர் சிட்டியின் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு கடைசி கட்டத்தில் பறிபோகக்கூடும்

மான்செஸ்டர்: அண்மையில் சாம் பியன்ஸ் லீக் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரியால் மட்ரிட் குழுவிடம் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறிய மான்செஸ்டர் சிட்டிக்கு மேலும் ஓர் ஏமாற்றம் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனலுடன் அது 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. சொந்த அரங்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற முடியாததால் சிட்டி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, சமநிலை கண்டு ஒரு புள்ளி மட்டும் பெற்றுள்ளதால் லீக் போட்டியின் கடைசி கட்டத்தில் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் சிட்டியை மான்செஸ்டர் யுனைடெட் பின்னுக்குத் தள்ளும் அபாயம் உள்ளது.

இந்த நிலை ஏற்பட்டால் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்புக்கு சிட்டி விடைகொடுக்க வேண்டி வரும். ஆட்டத்தின் 8வது நிமிடத் திலேயே சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ தமது குழுவுக்கு நல்லதொரு துவக்கத்தைத் தந்தார். அவர் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. ஆனால் சிட்டியின் கொண்டாட்டம் அதிக நேரம் நீடிக்கவில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து ஆர்சனலின் ஒலிவியே ஜிரூ ஆட்டத்தைச் சமப்படுத்தினார். ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கெவின் டி பிரூன் சிட்டியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால் 68வது நிமிடத்தில் அலெக்சிஸ் சஞ்செஸ் மூலம் ஆர்சனல் மீண்டும் ஆட்டத்தைச் சமப்படுத்தியது.

இந்நிலையில், தனது இறுதி லீக் ஆட்டத்தில் சமநிலை கண் டால் போதும், ஆர்சனல் மூன்றா வது இடத்தில் போட்டியை முடித்து சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதி பெறும். மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் குழு, வாட்ஃபர்ட்டை 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. லீக் பட்டத்துக்கான போட்டியில் லெஸ்டர் சிட்டியிடம் தோற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவின் சோகக் கதை தொடர்கிறது. சவுதாம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் அது 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக கோல் முயற்சியில் இறங்கும் ஆர்ச னலின் லோரண்ட் கொசியேல்னி (நடுவில்). அவர் தலையால் முட்டிய பந்து சிட்டியின் கோல் கம்பம் மீது பட்டு வெளியே சென்று சிட்டியின் ரசிகர்களைச் சிறிது நேரம் கதிகலங்க வைத்தது. ஆனால் பந்து வலைக்குள் புகுந்திருந்தாலும் ‘ஆஃப்சைட்’ காரணமாக கோல் நிராகரிக்கப் பட்டிருக்கும். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’