வெற்றிக்கு அறைகூவல் விடுக்கும் சுந்தரமூர்த்தி

ஏஎஃப்சி கிண்ண காற்பந்துப் போட்டி யின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற சிலாங்கூருக்கு எதிராக இன்றிரவு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும். 'இ' பிரிவில் முதல் இரண்டு நிலைகளில் வரும் குழுக்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தற்போது ஒன்பது புள்ளிகள் பெற்று இப்பிரிவின் முதல் இடத்தை பிலிப்பீன்சின் சிரேஸ் குழு வகிக்கிறது. இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில் சிலாங்கூர் குழு எட்டு புள்ளிகள் பெற்று இரண்டாவது நிலையில் இருக்கிறது.

ஏழு புள்ளிகளைக் குவித்திருக்கும் தெம்பனிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் தெம்பனிசின் ஏஎஃப்சி கிண்ணப் பயணம் ஒரு முடிவுக்கு வரும். எனவே, வெற்றியை உறுதி செய்ய கோல் வேட்டையில் இறங்குமாறு தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் பயிற்று விப்பாளர் வி. சுந்தரமூர்த்தி (படம்) தமது ஆட்டக்காரர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற இந்த ஆட்டத்தில் தெம்பனிஸ் வென்றே ஆகவேண்டும் என்று சுந்தரம் குறிப் பிட்டார். ஆதலால், மிகுந்த கவனத்துடன் விளையாடி ஆட்டத்தை கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிப்பதைவிட முழு மூச்சுடன் தாக்குதலில் இறங்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக அவர் கூறினார். இதனால் கோல்களை விட்டாலும் அதைவிட அதிகமாக கோல்களை போட்டு வெற்றி பெறும் சாத்தியம் உள்ளதாக சுந்தரம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!