ஸிடான்: லா லீகா விருதை வெல்லலாம்

மட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் லா லீகா காற்பந்து விருதை இன்ன மும் தமது குழு வெல்லும் வாய்ப்பு உள்ளதாக அந்தக் குழுவின் நிர்வாகியான ஸினடின் ஸிடான் கூறியுள்ளார். லா லீகா விருதுக்குப் போட்டி யிடும் குழுக்களாக பார்சிலோனா, ரியால் மட்ரிட், அலெட்டிக்கோ மட்ரிட் என மூன்று முதலில் அடையாளம் காணப்பட்டன. ஆனால், இன்னும் ஓர் ஆட்டமே மிஞ்சியுள்ள நிலையில் பார்சிலோனா அணி 88 புள்ளிகளுடனும் ரியால் மட்ரிட் அணி 87 புள்ளிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இவ்விரு குழுக்களுக்குப் பின் னால் அலெட்டிக்கோ மட்ரிட் குழு 85 புள்ளிகளுடன் மூன்றாம் நிலையில் உள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களிலும் உள்ள பார்சிலோனா, ரியால் மட்ரிட் அணிகள் தாங்கள் போட்டிபோடும் கடைசி ஆட்டத்தில் தோற்று அட்லெட்டிக்கோ மட்ரிட் அணி வென்றால் மட்டுமே அந்த அணி விருதை வெல்ல முடியும். இந்நிலையில், தமது ரியால் அணி விருதை வெல்லும் என்ற நம்பிக்கை தமக்கு இன்னமும் உள்ளதாக ஸிடான் கூறியுள்ளார். “நான் எப்பொழுதுமே ஆக்க கரமான சிந்தனையுடையவன். தற் பொழுது ஓர் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் எங்கள் அணி இரண்டாம் நிலையில் உள்ளது. காற்பந் தில் எதுவேண்டுமானாலும் நடக் கலாம். முழுமூச்சுடன் விளையாடி இறுதிவரை போராடி என்ன நடக் கிறது என்று பார்க்க வேண்டும்.

“எங்களது கடைசி ஆட்டம் எளிதாக இருக்கப்போவதில்லை. நான் விளையாட்டாளராக இருந்த போது இப்படிப்பட்ட ஓர் இறுக்க மான போட்டியை நான் கண்ட தில்லை. கடைசி நிமிடம்வரை என்ன நடக்கிறது என்று பார்ப் போம்,” என்று நம்பிக்கை ததும்ப தமது குழுவின் இணையப்பக்கத் துக்கு வழங்கிய பேட்டியில் விளக் கினார். இவ்வார இறுதியில் ரியால் மட்ரிட் டிப்போடிவோ லா கொருனா வையும் பார்சா அணி கிரனேடா அணியையும் எதிர்கொள்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி