ஜேமி வார்டி: லெஸ்டரிலேயே இருப்பேன்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வென்ற லெஸ்டர் சிட்டி குழுவிலேயே அடுத்த காற்பந்துப் பருவத்தில் தாம் தொடர்ந்திருக்கப்போவதாகக் அந்தக் குழுவின் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு லெஸ்டர் சிட்டி குழுவுக்கு ஒரு பெரிய ஊக்கமாகக் கருதப்படுகிறது. இதுபற்றிக் கூறிய வார்டி, “நாங்கள் இப்பொழுதுதான் பிரிமியர் லீக் விருதை வென்று அடுத்த காற்பந்துப் பருவ சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்கப்போகிறோம்.

“நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று தமது நிலையை விளக்கியுள்ளார். மேலும், சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் தமது பெயரில் ஒரு காற்பந்து பயிற்சிக் கழகத்தை ஜேமி வார்டி நேற்று தொடங்கி வைத்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இங்கிலாந்தின் மூன்றாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங். (வலது படம்) போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் பந்து சென்றுவிடாதபடி பார்த்துக்கொள்ளும் உக்ரேன் வீரர்கள். படங்கள்: ராய்ட்டர்ஸ், இபிஏ

24 Mar 2019

ஸ்டெர்லிங் ஹாட்ரிக்; இங்கிலாந்து அபார வெற்றி