மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு பின்னடைவு

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்ட பட்டியலில் முதல் நான்கில் ஒரு இடத்தைப் பிடித்து, அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடலாம் என்ற மான்செஸ்டர் யுனைடெட்டின் கனவு தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் 2=3 என வெஸ்ட் ஹேமிடம் தோற்றது மேன்யூ. மைதானத்திற்கு வரும் வழியில் மேன்யூ ஆட்டக்காரர் களின் பேருந்து தாக்கப்பட்டாலும் ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங் களுக்கு முன்பு வரை மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி 20 நிமிடத்தில் வெஸ்ட் ஹேமின் அண்டோனியோ, ரீட் ஆகிய இருவரும் அடித்த இரண்டு கோல்களும் ஆட்டத்தை வெஸ்ட் ஹேமிற்கு ஆதரவாக மாற்றியது. வெஸ்ட் ஹேமின் சொந்த மைதானமான போலிவனில் நடை பெற்ற கடைசி ஆட்டத்தில் அக் குழு வெற்றி பெற்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு