நியூகாசல், நோர்விச் வெளியேற்றம்

பிரிமியர் லீக் காற்பந்தாட்டப் போட்டியில் நேற்று எவர்ட்டன் குழுவை 3=0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது சண்டர் லேண்ட். அதன் மூலம் நியூகாசல், நோர்விச் இரண்டு குழுக்களும் பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. அந்த ஆட்டத்தில் சண்டர் லேண்டின் தற்காப்பு ஆட்டக்கார ரான லாமைன் கோனுக்கு கோல் வலைக்கு அருகே இருந்து கோல் போடுவதற்கான அருமையான வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றை அவர் தவறவிடாமல் பந்தை வலைக்குள் புகுத்தி கோல்களாக்கி தனது குழுவிற்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்த இரண்டு கோல்களையும் போடுவதற்கு அடித்தளம் அமைத் துக் கொடுத்தார் அந்தக் குழுவின் பேட்ரிக் வான் ஆன்ஹோல்ட். கோனுக்கு முன்னதாக பேட்ரிக் வான் தனக்குக் கிட்டியிருந்த ஃப்ரீகிக் வாய்ப்பைத் தவறவிடாமல் ஒரு கோல் போட்டிருந்தார்.

பிரிமியர் லீகில் தொடர்ந்து நிலைத் திருக்க நியூகாசல் யுனைடெட், நார்விச் சிட்டி ஆகிய குழுக்களுக்கு மூன்று புள்ளிகள் இருந்தால் போதும் என்பது நேற்று முன்தின ஆட்டம் உணர்த்தியது. சண்டர்லேண்ட் அணி நாளை மறு நாள் வார்ட்ஃபோர்டில் விளை யாடவுள்ளது. எவர்ட்டன் குழுவின் படுதோல்வியால் அந்தக் குழுவின் நிர்வாகி ராபர்ட்டோ மார்டினெஸின் பதவி இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்விச் சிட்டிக்கு எதிராக நடக்கவிருக்கும் ஆட்டத்திற்கு முன்பு குழுவின் நிர்வாகி மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. பிரிமியர் லீக் கிண்ண ஆட்டத்தில் மார்ச் 5 முதல் நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள எவர்ட்டன் குழு, 3-=0 தோல்வி யையும் சேர்த்து கடந்த 10 ஆட்டங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. எஃப்ஏ கிண்ணம், கேப்பிட்டல் ஒன் கிண்ணம் ஆகியவற்றில் அரை இறுதி ஆட்டங்கள் வரை எவர்ட்டன் குழுவுக்கு மார்ட்டி னெஸ் தலைமை தாங்கினார். இந்நிலையில் ராபர்ட்டோ மார்டினெஸை எவர்ட்டன் பதவி நீக்கம் செய்துள்ளதாக ஸ்கை தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சண்டர்லேண்ட் குழுவின் மூன்றாவது கோலை, கோல் வலைக்கு மிக அருகாமையில் இருந்து உதைத்து கோலாக்கினார் லாமைன் கோன். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!