பெங்களூரு அணி தோல்வி அடைய திடல்தான் காரணம்: கே.எல்.ராகுல்

பெங்களூரு: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைவதற்கு திடல்தான் காரணம் என்று கூறி யுள்ளார் பெங்களூரூ அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே.எல். ராகுல். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பெங்களூரு அணி நன்றாக விளையாடியும்கூட, பின்னர் தொடர்ந்த மும்பை இந்தியன்ஸ் மிகச் சிறப்பாகப் பந்தடித்து போட்டியை வென்று விட்டது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கீரன் போலார்ட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று விட்டனர்.

அரை சதம் போட்டும் இப் போட்டியில் பெங்களூரு அணி யின் ராகுல் அரை சதம் போட்டும் பயனில்லாமல் போய் விட்டது. போட்டி முடிவில் ராகுல் அளித்த பேட்டியில், “விக்கெட் சரியில்லை கோஹ்லி, கெய்லை சீக்கிரமே இழந்ததால் எங்களது பேட்டிங் உத்தியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. விக்கெட் மெதவாக இருந்தது. ஓட்டம் எளிதாக எடுக்க முடியவில்லை. ‘ஹிட்’ பண்ண முடியவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே.எல்.ராகுல். படம்: ஏஎப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி