மோசமான பேட்டிங்தான் தோல்விக்குக் காரணம்

ஹைதராபாத்: 9வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி சன்ரை சர்ஸ் ஹைதராபாத்தை தோற் கடித்து 3வது இடத்துக்கு முன்னேறியது. அது டெல்லி அணி பெற்ற 6வது வெற்றி யாகும். ஹைதராபாத் 4வது தோல்வியைத் தழுவியது. வெற்றி குறித்து டெல்லி அணிக்குக் கேப்டனாக பணி யாற்றிய டுமினி கூறும்போது, "பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினர். இளம் வீரர்கள் தங் களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினர்," என்றார். தோல்வி குறித்து ஹைதரா பாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சரியாக பந்தடிக்காதது காரணம் என்று கூறியுள்ளார். "20 முதல் 30 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன்தான் வீசினார் கள். 146 ஓட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய இயலாது. அப்படி இருந்தும் பந்துவீச்சாளர் கள் கடுமையாகப் போராடினர். எங்களது பந்தடிப்புதான் சரியாக இல்லை. மோசமான பந்தடிப்பால் தான் தோல்வியைத் தழுவினோம் என்றார் வார்னர்.

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. அந்த ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பில் தோற்றுப்போன ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்தடிக்கிறார். இடமிருப்பவர் டெல்லி அணியின் குவின்டன் டிகாக். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!