மும்பையை சாய்த்த பஞ்சாப் புயல்

விசா­கப்­பட்­டி­னம்: ஐபிஎல் கிரிக்­கெட் போட்­டி­யில் 7 விக்கெட் வித்­தி­யா­சத்­தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்­றுள்­ளது. பூவா தலையா வென்ற மும்பை அணித்­தலை­வர் ரோகித் சர்மா முதலில் பந்­தடிக்க முடிவு செய்தார். இதன்­படி கள­மி­றங்­கிய மும்பை அணிக்கு அதிர்ச்­சியே காத்­தி­ருந்தது. தொடக்கம் முதலே அந்த அணி விக்­கெட்­டு­களை அடுத் தடுத்­துப் பறி­கொ­டுத்­தது. பஞ்சாப் அணியின் பந்­து­வீச்­சுத் தாக்­கு­தலைச் சமா­ளிக்க முடியாமல் உன்­முக்த் சந்த், அம்பதி ராயுடு இருவரும் ஓட்­ட­மெ­து­வும் எடுக்­கா­மல் ஆட்­ட­மி­ழந்த­னர். ராணா, பொல்­லார்ட் இருவரை யும் தவிர மற்ற ஆட்­டக்­கா­ரர்­கள் யாரும் 20 ஓட்­டங்கள்­கூட எடுக்க வில்லை.

பஞ்சாப் அணியின் பந்­து­வீச்சை சமா­ளிக்க முடியாத மும்பை அணி 20 ஓவரில் 9 விக்­கெட்­டுகள் இழப்புக்கு 124 ஓட்­டங்களே எடுத்­தது. பஞ்சாப் அணி சார்பில், ஸ்டோய்னிஸ் 4 விக்­கெட்­டு­களை யும் சந்தீப் சர்மா, மோகித் சர்மா 2 விக்­கெட்­டு­களை­யும் வீழ்த்­தி­னர். இதனை­ய­டுத்து 125 ஓட்­டங்கள் எடுத்­தால் வெற்றி என்ற எளிய இலக்­கு­டன் கள­மி­றங்­கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஆம்லா ஓட்­டங்கள் எதுவும் எடுக்­கா­மல் ஆட்­ட­மி­ழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்­தலை­வர் முர­ளி ­வி­ஜய், சாஷா இருவரும் நிதா­ன­மாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற­னர். ஆனால், சாஷா 56 ஓட்­டங்களில் ஆட்டமிழந்தார். முர­ளி­ வி­ஜய் 54 ஓட்­டங்க ளோடு ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், அந்த அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 127 ஓட்­டங்கள் எடுத்து 7 விக்­கெட்­டுகள்­ வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணியின் பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்திய பஞ்சாப்பின் ஸ்டோய்னிஸ். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

தலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2019

கோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி