பெங்களூரு அணி அபார வெற்றி

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்கள் குவித்தது. கெய்ல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் விராத் கோஹ்லி =- டி வில்லியர்ஸ் இணை அதிரடியாக விளையாடியது. டி வில்லியர்ஸ் 43 பந்துகளிலும், விராத் கோஹ்லி 53 பந்துகளிலும் சதம் அடித்தனர். கோஹ்லி இந்தத் தொடரில் விளாசிய 3-வது சதமாக இது அமைந்தது. 249 ஓட்டங்கள் இலக்குடன் பந்தடித்த குஜராத் அணி 18.4 ஓவரில் 104 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 37 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்மித் 7, பிரண்டன் மெக்கலம் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. குஜராத் அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 14 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி கடைசி இரு ஆட்டங்களி லும் வெற்றி பெறவேண்டிய நெருக் கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரு அணி சேர்த்த 248 ஓட்டங்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவிக்கும் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங் களாகும். இதற்கு முன்னர் 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இதே பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் சேர்த்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் 2-வது விக்கெட்டுக்கு கோஹ்லி- டி வில்லியர்ஸ் இணை 229 ஓட்டங்கள் குவித்தது. இதுவும் சாதனையே. இந்த இணை கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக இதே விக் கெட்டுக்கு 215 ஓட்டங்கள் குவித்திருந்தன. இந்த சாத னையை அவர்களே முறியடித் துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!