வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங் வெற்றி

அட்லாண்டா: சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் 200 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியில் முதலாவதாக வந்து விருது வென்றுள்ளார். முன்னதாக இவர் வெள்ளிக்கிழமை இதே பாணி நீச்சல் போட்டியில் 100 மீட்டர் போட்டிக்கான விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை நடந்த 200 மீட்டர் போட்டியில் ஸ்கூலிங் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 57.37 வினாடிகள். இவருக்கு அடுத்த நிலையில் வந்த பேஸ் கிளார்க் என்பவர் 1 நிமிடம் 58.03 வினாடிகளில் அதே தூரத்தைக் கடந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி