வெற்றியாளர் விருது மீண்டும் பார்சாவுக்கே

கிரேனடா: ஸ்பெயினின் லா லீகா காற்பந்து பருவத்தின் இறுதி ஆட்டத்தில் கிரேனடா குழுவை 3=0 என்ற கோல் எண்ணிக்கை யில் வெற்றி கொண்ட பார்சி லோனா அணி 24 தடவையாக வெற்றியாளர் விருதைத் தட்டிச் சென்றுள்ளது. இதன்மூலம் பரம வைரியான ரியால் மட்ரிட் குழுவை அது ஒரு புள்ளி வித்தியாசத்தில் முந்திக் கொண்டுள்ளது. நேற்று அதிகாலை கிரேனடா வுக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா சார்பாக அதன் மூன்று கோல்களையும் லுயிஸ் சுவாரெசே போட்டு அசத்தினார்.

இதன்வழி, சுவாரெஸ் பார்சி லோனாவின் கடைசி ஐந்து ஆட் டங்களில் மட்டும் 14 கோல்கள் போட்டு சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லா லீகா காற்பந்தின் இறுதி ஆட்டத்தின் மூலமே வெற்றியாளர் விருதை வெல்லப்போவது யார் என்று தீர்மானிக்கப்பட உள்ள நிலையில், நேற்று ரியால், பார்சிலோனா அணிகள் கள மிறங்கின. எனினும், டிப்போடிவோ லா கொருனாவை சந்தித்த ரியால் மட்ரிட் குழு அந்த ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே அதன் நட்சத்திர ஆட்டக்காரர் தனது முதல் கோலை போட்டதால் பார்சா அணி நெருக்கடிக்கு ஆளாகுமோ என்று ரசிகர்கள் தவித்தனர். ஆனால், அது பற்றி சற்றும் கவலைப்படாது ஆட்டத்தின் 22வது நிமிடத்திலிருந்து தனது கோல் வேட்டையை சுவாரெஸ் தொடங்கினார்.

ஸ்பானிய லா லீகா விருதை தங்கள் அணி வென்ற களிப்பில் கொண்டாட்டத்தில் மூழ்கிய பார்சிலோனா ரசிகர்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்