அரங்கில் ‘வெடிகுண்டு’: விசாரணைக்கு உத்தரவு

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ஓல்ட் டிராஃப்பர்ட் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம், பாதுகாப்புப் பாவனைப் பயிற்சி நிமித்தம் பயன்படுத்தப்பட்ட ‘வெடி குண்டு’ காரணமாக ஒத்திவைக் கப்பட்டது. அரங்கில் உள்ள கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த ‘வெடி குண்டு’ உண்மையானது என்று கருதப்பட்ட நிலையில் அங்கு பதற்றம் நிலவியது.

இதனை அடுத்து, 75,000 ரசிகர்கள் அமரக்கூடிய அந்த அரங்கிற்கு வெடிகுண்டு செய லிழப்பு நிபுணர்கள் விரைந்தனர். மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கும் போர்ன்மத்துக்கும் இடையிலான கடைசி லீக் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘வெடிகுண்டு’ போலியானது என்பது உறுதிப் படுத்தப்பட்டது. பாவனைப் பயிற்சி நடத்தும் தனியார் நிறுவனம் அந்த ‘வெடிகுண்டை’ கவனக்குறைவால் கழிவறையிலேயே விட்டுச் சென்று விட்டதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக முழு விசாரணையை நடத்த மான்செஸ்டர் நகரின் மேயரும் போலிஸ் ஆணையாள ருமான டோனி லோய்ட் உத்தர விட்டுள்ளார். பாவனைப் பயிற் சிக்குப் பயன்படுத்தப்பட்ட ‘வெடி குண்டை’ அப்புறப்படுத்தாமல் அரங்கிலேயே விட்டுச் சென்று அதனால் ஏற்பட்ட பதற்றநிலை ஏற்க முடியாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

 

மான்செஸ்டர் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃப்பர்ட் அரங்கில் உள்ள கழிவறையில் ‘வெடிகுண்டு’ கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அரங்கின் மூலை முடுக்கெல்லாம் அதிகாரிகள் மோப்ப நாய்களை வைத்து சோதனையிட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் ல் உள்ள கழிவறையில் ‘வெடிகுண்டு’ கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அரங்கின் மூலை முடுக்கெல்லாம் அதிகாரிகள் மோப்ப நாய்களை வைத்து சோதனையிட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’