இரண்டாம் இடத்தை இழந்த ஸ்பர்ஸ்

நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் அதன் கடைசி ஆட்டத்தில் படுதோல்வி அடைந்து இவ்வளவு நாட்களாக வகித்து வந்த இரண்டாவது இடத்தை ஸ்பர்ஸ் குழு பறிகொடுத் துள்ளது. இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்பட்டிருக்கும் நியூகாசலுடன் ஸ்பர்ஸ் நேற்று முன்தினம் மோதியது. சோகத்தில் ஆழ்ந் திருக்கும் நியூகாசல் அதன் சொந்த அரங்கில் விளையாடியது. பிரிமியர் லீக்கிலிருந்து வெளி யேறும் நியூகாசல் அதன் கடைசி ஆட்டத்தில் இரண்டில் ஒன்றை பார்த்துவிடலாம் என்ற முனைப் புடன் களமிறங்கியது.

நியூகாசலின் இந்தச் சீற்றத்தை முற்றிலும் எதிர்பார்க்காத ஸ்பர்ஸ் 5-1 எனும் கோல் கணக்கில் சுருண்டது. மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 4-0 எனும் கோல் கணக்கில் பந்தாடிய ஆர்சனல் லீக் பட்டியலின் மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

மான்செஸ்டர் சிட்டிக்கும் சுவான்சிக்கும் இடையிலான ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் சமநிலையில் முடிந்த போதிலும் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதி பெறுவதை சிட்டி உறுதி செய்துள்ளது. இந்நிலையில், லீக் பட்டத்தை வென்ற லெஸ்டர் சிட்டி 1=1 எனும் கோல் கணக்கில் செல்சியுடன் சமநிலை கண்டது. கிறிஸ்டல் பேலஸ் அணியை 4-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த சவுதாம்டன் யூரோப்பா லீக்குக்குத் தகுதி பெற்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி