விராத் கோஹ்லி புதிய சாதனை

கோல்கத்தா: ஐபிஎல் தொடரில் பெங்களூரு 6வது வெற்றி பெற்ற தன் மூலம் பிளே=ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. கோல்கத்தாவுக்கு இது 5வது தோல்வியாகும். இருப்பினும் இதுவரை 7 வெற்றிகள் கண்டுள்ள கோல்கத்தாவும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இந்தத் தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி யுள்ள விராத் கோஹ்லி 3 சதம், 5 அரை சதங்களுடன் 752 ஓட் டங்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு பருவத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 2012ஆம் ஆண்டில் 733 ஓட்டங்களும் (15 ஆட்டம்), சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸ்ஸி 2013ல் 733 ஓட்டங்களும் குவித்ததே ஒரு ஐபிஎல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ஓட்ட சாதனையாக இருந்தது. அதை இப்போது கோஹ்லி முறியடித்துள்ளார். கெய்ல் ஒரு சதமும் 7 அரை சதங்களும் 2012-ல் அடித்தார். அதற்கு அடுத்த வருடம் ஹஸ்ஸி 6 அரை சதங்கள் அடித்தார். ஆனால் கோஹ்லி தற்போதைய நிலையிலேயே 3 சதங்களும் 5 அரை சதங்களும் அடித்துள்ளார். இன்னமும் அவர் சில போட்டிகள் ஆடவேண்டியுள்ளது. அதனால் மேலும் பல சாதனைகளை கோஹ்லி படைக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை விளாசும் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃபி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!