வெலன்சியா குழு சிங்கப்பூர் வருகை

சிங்கப்பூர் தொழிலதிபரான பீட்டர் லிம்மின் ஸ்பானிய காற்பந்துக் குழுவான வெலன்சியா அடுத்த ஆண்டு சிங்கப்பூர் வரவுள்ளது. அப்போது நட்பு முறை ஆட்டமொன்றில் அவர்கள் விளையாடவுள்ளனர். தேசிய அரங்கில் நடைபெற உள்ள இந்த ஆட்டத்திற்கு லா லீகாவும் சிங்கப்பூர் காற்பந்து சங்கமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் நாளை நடைபெற வுள்ள நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள வெலன்சியா விளையாட் டாளர்கள், அய்ஸ்டரான் ஆகியோர் இன்று பாரா கான் கடைத்தொகுதியில் பொதுமக்களைச் சந்திக்கிறார்கள்.