ஸிம்பாப்வே தொடர்: டோனி பதிலுக்காக காத்திருக்கும் தேர்வுக் குழு

ஹராரே: ஸிம்பாப்வே தொடரில் டோனி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு அவரது பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஸிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அணித் தேர்வில் விராத் கோஹ்லி, தவான், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தொடரில் அணித் தலைவர் டோனி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்கான பதிலை அவரிடமே தேர்வுக்குழு விட்டுள்ளது. அவருடைய பதிலைப் பொறுத்து அணியினரின் தேர்வு அமையும். டோனி ஓய்வு கேட்கும்பட்சத்தில் ரகானே கேப்டனாக நியமிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு