வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் மேன்யூ

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்குசன் ஓய்வு பெற்றதிலிருந்து அந்தக் குழு முன்போல் விளையாடுவதில்லை, அதனிடம் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற வேட்கை இல்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல் இந்தப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் என அனைத்துப் போட்டிகளிலிருந்தும் வெளியேறிய மேன்யூ, இன்று கிரிஸ்டல் பேலசுடன் மோதும் எஃப்ஏ கிண் ணப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இதேபோன்ற நெருக்கடியான சூழலில் சர் அலெக்ஸ் ஃபெர்குசன் 1990ஆம் ஆண்டு இதே கிரிஸ்டல் பேலஸ் குழுவை வீழ்த்தி எஃப்ஏ கிண்ணத்தை வென்றதாலேயே அவரது தலைதப்பியது. இல்லை யெனில் அந்த ஆண்டே அவர் குழுவின் நிர்வாகப் பொறுப்பி லிருந்து தூக்கப்பட்டிருப்பார். ஆனால், நடந்தது என்னவோ அவர் அன்றைய போட்டியில் வென்றதோடு அல்லாமல் அதன் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் வரலாற்றிலேயே சிறந்த நிர்வாகி எனப் புகழின் உச்சாணிக்கு செல்லும் வகையில் 13 பிரிமியர் லீக் விருதுகள், இரண்டு சாம்பியன்ஸ் லீக் விருதுகள் என விருது மழை பொழிய வைத்தார்.

இன்று நடைபெறவுள்ள எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள மற்ற மேன்யூ வீரர்களுடன் மார்க்கஸ் ரோஹோ (இடக்கோடி), வெய்ன் ரூனி (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

தலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2019

கோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி