கரை சேர்த்தார் கருண்

ராய்ப்பூர்: இந்தியாவில் நடந்து வரும் ஒன்பதாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இதற்கு முன்பு இல்லாத வகையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் அரையிறுதிக்குச் செல்லும் நான்கு அணிகள் எவை என்பது நேற்று மாலை வரை உறுதிப்படுத்தப்பட வில்லை. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் டோனியைத் தலைவராகக் கொண்ட ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ், விஜய் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் தொடரைவிட்டு வெளியேறுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி பட்டியலின் முதல் நிலையில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொண்டது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டுமெனில் இந்த ஆட்டத்தில் கட்டாயமாக வெல்ல வேண்டும் என்ற நிலை டெல்லி அணிக்கு. நாணய சுழற்சியில் வென்ற அந்த அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து, பந்தடிக்கக் கள மிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அணித் தலைவர் டேவிட் வார்னர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆயினும், மற்ற வீரர்கள் யாரும் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு தராததால் அணியின் ஓட்ட வேகம் மந்த மாகவே இருந்தது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங் களை எடுத்தது.

ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் இறுதி வரை களத்தில் நின்று 83 ஓட்டங்களை விளாசி கடைசி பந்தில் டெல்லி அணியை வெற்றியை பெறச் செய்த கர்நாடக மாநில வீரர் கருண் நாயர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை