கபில்தேவைப் பின்னுக்குத் தள்ளினார் ஆண்டர்சன்

லீட்ஸ்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசை யில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவைப் பின்னுக்குத் தள்ளி ஆறாமிடத்திற்கு முன்னேறியுள்ளார் இங்கி லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற் காக இலங்கை அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை லீட்ஸ் திடலில் தொடங்கியது.

முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டு களை இழந்தபோதும் அலெக்ஸ் ஹேல்ஸ் (86), ஜேம்ஸ் பேர்ஸ்டோவ் (140) ஆகியோர் பொறுப்பாக ஆட, அந்த அணி முதல் இன் னிங்சில் 298 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன் னிங்சைத் தொடங்கிய இலங்கை அணியில் ஆறு பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அந்த அணி 91 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 34 ஓட்டங்களை எடுத்தார். அந்த அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் ஆண்டர்சன். அவர் 16 ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற் றினார். இதன்மூலம், அவரது டெஸ்ட் போட்டிகளில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 438 ஆக உயர்ந்தது. கபில்தேவ் 434 விக்கெட்டுகளைக் கைப் பற்றியுள்ளார்.

‘ஃபாலோ ஆன்’ பெற்று தனது இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி ஓர் ஓட்டம் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின் மையால் இரண்டாம் நாள் ஆட்டம் முடி விற்கு வந்தது. நேற்று மூன்றாம் நாள் ஆட் டத்தின் தொடக்கத்திலேயே ஏழு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் முதல் இன்னிங்சில் ஓட்ட மேதும் எடுக்காத கருணரத்னே. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருப்பதால் இந்தப் போட்டியில் இலங்கை அணி தோற்பது உறுதி என்பது கிரிக்கெட் விமர் சகர்களின் கருத்து.

தாக்குப் பிடித்து ஆடிய இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூசை (வலது) வெளியேற்றி அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசையில் ஆறாவது நிலைக்குத் தாவிய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 33. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்