கிண்ணம் வென்ற பார்சிலோனா

கேனிங்: ஸ்பானிய மன்னர் கிண்ணக் காற்பந்து தொடரை வென்றுள்ளது பார்சிலோனா. இறுதி ஆட்டத்தில் மோதிய செவ்வியா, பார்சிலோனா ஆகிய இரு குழுக்களுமே கோல் எதுவும் போடவில்லை. ஆனால், கூடுதல் நேரத்தின் போது இரண்டு கோல்கள் அடித்த பார்சிலோனா 28வது முறையாக இந்தக் கிண்ணத்தைக் கைப்பற்றி உள்ளது. ஆட்ட நேரத்தின்போது கோல் எதுவும் போடாதபோதும் இரு குழுக்களின் ஆட்டக்காரர்களும் தப்பாட்டம் காரணமாக வெளியேற்றப்பட்டனர். பார்சிலோனாவின் ஜாவியர் மஸ்கரானோ முதல் பாதி ஆட்டத்தின் கெவின் கமிரோவின் சட்டையைப் பிடித்ததற்காக 36வது நிமிடத்தில் நேராக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

அதேபோல், செவ்வியாவின் எவர் பனோகாவிற்கும் நெய்மாரை தள்ளிவிட்டதற்காக 92வது நிமிடத்தில் நேராக சிவப்பு அட்டை பெற்றார். அவரைத்தொடர்ந்து டேனியல் காரிகோ தப்பாட்டம் காரணமாக மஞ்சள் அட்டையும் கோபமாக நடந்துகொண்டதற்காக மற்றொரு மஞ்சள் அட்டையும் பெற்று கூடுதல் நேரத்தின் கடைசி பகுதியில் வெளியேற்றப்பட்டார். 97வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார் அலப். அவரைத்தொடர்ந்து 122வது நிமிடத்தில் மெஸ்சி கடத்தியப் பந்தைக் கோலாக மாற்றினார் நெய்மார். எனவே, 2-1 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா செவியாவை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

லா லீகா கிண்ணத்தை வென்ற கையோடு ஸ்பானிய மன்னர் கிண்ணத்தையும் வென்ற மகிழ்ச்சியைத் தங்கள் குழந்தைகளோடு கொண்டாடும் பார்சிலோனா வீரர்கள். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next