குஜராத்தை எதிர்கொள்கிறது பெங்களூரூ

மும்பை: கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியதால், பட்டி யலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பெங்களூரூ அணி இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டி யில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி= பெங்களூரூ அணிகள் மோதின. பூவா தலையா வென்ற பெங்களூரூ அணித்தலைவர் விராத் கோஹ்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் டி காக், பண்ட் ஆகியோர் தொடக்கவீரர்களாக களம் இறங்கினார்கள். பண்ட் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் அரவிந்த் பந்தில் ஆட்டம் இழந்தார். பெங்களூரூ அணி பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளி யில் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

இந்தக் கடினமான ஆடுகளத்தில் தொடக்க வீரர் டி காக் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 17 ஓட்டங்கள் சேர்க்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரூ அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும் கெய்ல் இரண்டு விக்கெட்டு களையும் வீழ்த்தினார்கள். பின்னர் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விராத் கோஹ்லி, கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2வது ஓவரின் முதல் பந்தில் கெய்ல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 6 ஓட்டங்களில் ஏமாற்றம் அளித்தார்.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதை தனது அணியினருடன் கொண்டாடும் பெங்களுரூ அணித் தலைவர் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்