லிவர்பூல், யுனைடெட் குழுக்களுக்கு அபராதம்

லண்டன்: யூரோப்பா கிண்ணப் போட்டியின்போது லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய குழுக்களின் ரசிகர்கள் விதி முறைக்குப் புறம்பான முழக்கங் களையிடுதல் போன்ற பல்வேறு விதிமீறல்களைப் புரிந்ததால் அவ்விரண்டு குழுக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஜாம்பவான் களான இவ்விரு குழுக்களுக்கும் தலா 40,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. யூரோப்பா ஆட்டங்களின்போது லிவர்பூலின் ரசிகர்கள் வாண வேடிக்கை நிகழ்த்தி பொருட்களை வீசினர். இந்தக் குற்றத்தின் பேரில் அக்குழுவுக்குக் கூடுதலாக 17,000 யூரோ அபராதம் விதிக்கப் பட்டது. விளையாட்டரங்குகளில் எதிரணிக் குழுக்களின் ரசிகர் களுக்கு யுனைடெட்டின் ஆதர வாளர்கள் தொல்லை விளை வித்ததால் அக்குழுவுக்குக் கூடுதலாக 18,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்