ஏஎஃப்சி கிண்ண காலிறுதியில் தெம்பனிஸ்

கவுஹாத்தி: ஆசியக் காற்பந்துச் சம்மேளனப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்தியா வின் அசாம் மாநிலத்தில் நடை பெற்ற 16வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மோகன் பகான் குழுவைத் தெம்பனிஸ் குழு எதிர்கொண்டது. காயம் காரணமாக மோகன் பகான் குழுவுக்குப் பல நட்சத்திர வீரர்களைக் களமிறக்க முடியா நிலை ஏற்பட்டபோதிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்ற முனைப்புடன் அது விளை யாடியது.

அதே வேளையில் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் தலைமை ப-யிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் வி. சுந்தரமூர்த்திக்கு தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் பயிற்றுவிப் பாளர் என்கிற முறையில் இது கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. எனவே, அவருக்கு ஒரு சிறந்த பிரியாவிடை கொடுக்கும் வகையில் மோகன் பகானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் தெம்பனிஸ் அணியினர் போர் முரசு கொட்டினர். ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் மோகன் பகானுக்கு கோல் போடும் வாய்ப்பு கிட்டியது. ஜேஜே லால்பெக்லுவா தலை யால் முட்டிய பந்து வலையைத் தொடும் முன் அதைத் தடுத்து நிறுத்தினார் தெம்பனிசின் இஸ்மாடி முக்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

தலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2019

கோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி