யுனைடெட்டுடன் மொரின்யோ பேச்சுவார்த்தை

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் இரண் டாவது நாளாக ஜோசே மொரின்யோ நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு ஓர் ஆண்டுக்கு வருமானம் குறைந்தது 10 மில்லியன் பவுண்ட் சம்பளம் வழங்கப்படும் என்று நம்பப்படு கிறது. மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கு மொரின்யோ இணக்கம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விளம்பர உரிமை தொடர்பாகக் கலந்துரை யாடல் நடைபெறுவதாக ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்தது. மொரின்யோவின் விளம்பர உரிமைகளைத் தற்போது அவரது பழைய குழுவான செல்சி இன்னும் வைத்திருக்கிறது.

அதைப் பெறுவதற்கு யுனை டெட் செல்சிக்கு பல மில்லியன் பவுண்ட் செலுத்தவேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் யுனைடெட்டின் நிர்வாகியாக மொரின்யோ பொறுப்பேற்பார். சுவீடனின் நட்சத்திர வீரர் ஸிலாட்டான் இப்ராஹிமோ விச்சை யுனைடெட்டுடன் ஒப்பந்தம் செய்ய மொரின்யோ விரும்புவதாகத் தகவல் வெளி யாகி உள்ளது.