நட்புமுறை காற்பந்து ஆட்டம்: சாதனை நாயகன் ரேஷ்ஃபர்ட்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நட்புமுறை காற்பந்து ஆட்டமொன்றில் மான்செஸ்டர் யுனைடெட்டின் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆட்டம் தொடங்கிய 3ஆம் நிமிடத்திலேயே இங்கிலாந்துக் கான முதல் கோலை போட்டு இங்கிலாந்து நிர்வாகியான ரோய் ஹாட்சனின் புகழாரத்தைப் பெற் றுள்ளார்.

இந்த கோலின் மூலம் இங்கிலாந்துக்காக ஆக இளம் வயதில் கோல்கள் போட்டவர்கள் பட்டியலில் மைக்கல் ஓவன், வெய்ன் ரூனிக்குப் பிறகு மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ரேஷ்ஃபர்ட். மேலும் தனது முதல் ஆட்டத்திலேயே கோலைப் போட்ட ஆக இளைய இங்கிலாந்து வீரர் எனும் சாதனையையும் அவர் பெற்றார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வுக்கு இடையிலான அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டம் நேற்று அதிகாலை சண்டர்லேண்டின் ஸ்டேடியம் ஆஃப் லைட் மைதானத் தில் நடைபெற்றது. இதில் காயம் காரணமாக லிவர்பூல் வீரர் டேனியல் ஸ்டரிட்ஜ் விலகியிருக்க மான்செஸ்டர் யுனைடெட் வீரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட்டுக்கு வாய்ப்பளித்தார் ரோய் ஹாட்சன்.

அவரும் அதற்கேற்றாற்போல் ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தி லேயே கோல் போட்டது மட்டுமல்லாது ஆட்டம் முழுவதும் தமது திறமையை வெளிப்படுத்தத் தவறவில்லை.

ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே தமது முதல் கோலைப் போட்டு இங்கிலாந்து ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார் இளம் ஆட்டக்காரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட். படம்: ராய்ட்டர்ஸ்