‘மிகச் சரியான தேர்வு’

தமிழவேல்

சிங்கப்பூரில் பிறந்து, வளர்ந்து ஒருவர் அதுவும் சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரமாக ஜொலித்த திரு வி. சுந்தரமூர்த்தி சிங்கப்பூரின் தேசிய காற்பந்து அணியின் தலைமைப் பயிற்று விப்பாளர் ஆனது மிகச் சரியான தேர்வு என பல ரசிகர்களும் காற்பந்து ஆர்வலர்களும் கூறுகின்றனர். எனினும், இனிதான் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் முழு ஆதரவு திரு சுந்தரத்திற்கு வழங்கப்படவேண்டும் என்பதும் பலரது கருத்தாக உள்ளது. அதையே தமிழ் முரசிடம் தொலைபேசிவழி சிங்கப்பூர் காற்பந்து அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் திரு பி என் சிவஜி, 65 தெரிவித்தார்.

“அவருக்கு இந்த வட்டாரத்தில் உள்ள அணிகளைப் பயிற்றுவித்த அனுபவம் உள்ளது. நல்ல தகுதி உடையவர். ஆனால் இனிதான் அவருக்கு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் (எஃப்ஏஎஸ்) இருந்து முழு ஆதரவு கிடைக்கவேண்டும். அது மிகவும் அவசியம்,” என்றார் திரு சிவஜி. ஆட்டக்காரர்களின் தேர்வில் திரு சுந்தரத்திற்கு முன்னுரிமை வேண்டும் என்றும் அவர் தேர்ந்தெடுக்கும் விளையாட் டாளர்களை அவருக்கு வழங்குவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட போது திரு சுந்தரத்துக்கு வழங்கப்பட்ட அணியின் சீருடை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங்

23 Aug 2019

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்

லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

23 Aug 2019

ஆர்சனலுக்கான சவால்