சுவர்ப்பந்து: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஜோஷ்னா

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெறும் அனைத்துலக சுவர்ப்பந்து போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஹாங்காங்கின் அன்னி அவ்வை எதிர்கொண்டார்.

ஹாங்காங் வீராங்கனை சொந்த மண்ணில் தனது ரசிகர்களுக்கு முன்பாக மிகுந்த முனைப்புடன் களமிறங்கிய போதிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற இலக்குடன் இருந்த ஜோஷ்னா கவனம் சிதறலின்றி போட்டியிட்டு வாகை சூடினார்.

ஒரு மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான மோதலில் ஜோஷ்னா 8-11, 11-9, 13-11, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். சென்னையைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தின் ஜோலே கிங்குடன் மோதுகிறார்.

ஜோஷ்னா சின்னப்பா. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!