வாகை சூடிய வார்னர் அணி

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியோடு மோதிய பெங்களூரு அணி மூன்றாவது முறையாக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணித் தலைவர் கோஹ்லி, "நானும் டிவில்லி யர்சும் சீக்கிரமே ஆட்டமிழந்தது தான், அணிக்குப் பெரும் பின்னடைவாக போய்விட்டது," என்றார். மேலும் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு அவர்களது பலமான பந்துவீச்சுதான் காரணம் என்றும் அவர் கூறினார். அவ்வணியின் அதிரடி ஆட்டக் காரர்களான கெய்ல் 76 (38), கோஹ்லி 54 (35), டிவில்லியர்ஸ் 5 (6) ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

எதிரணியின் முக்கிய விக் கெட்டுகளைச் சாய்த்த ஹைதராபாத் அணியினர் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி பெங்களூருவின் பந்தடிப்பாளர்களை நிலைதடுமாறச் செய்து வெற்றியை எட்டிப்பிடித் தனர். முன்னதாக, பூவா தலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்தடித்தது. அணித்தலைவர் வார்னர் 69 (38) ஓட்டங்களைக் குவித்து அணிக்கு சிறப்பான தொடக் கத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும் 15 பந்துகளை மட்டுமே சந்தித்த கட்டிங் 39 ஓட்டங்களை எடுத்து அணியை வலுப்படுத்தினார்.

பெங்களூரு அணியின் முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தோடு மட்டுமல்லாமல் அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஐபிஎல் கிண்ணத்தை வென்ற ஹைதராபாத் அணியினரின் உற்சாகக் கொண்டாட்டம். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!