நட்புமுறை காற்பந்துப் போட்டி: பிரான்ஸ் வெற்றி

நான்ட்ஸ்: ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தனக்குக் கிடைத்த ஃப்ரீகிக் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கெமரூனுக்கு எதி ரான ஆட்டத்தை பிரான்ஸ் அதிரடி யாகக் கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடைபெற்ற விறுவிறுப் பான ஆட்டத்தை 3--=2 எனும் கோல் கணக்கில் சொந்த மண் ணில் ஆடிய பிரான்ஸ் வென்றது. ஆட்டத்தின் முதல் கோலை பிரான்ஸ் 21 நிமிடத்தில் போட்டது. பிலேசே மாட்டுயூடி அனுப்பிய பந்து வலைக்குள் புகுந்தது. அரங்கில் கூடியிருந்த பிரஞ்சு ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் கெமரூன் பதிலடி கொடுத்தது. போர்ட்டோவுக்காக விளையாடி வரும் கெமரூன் வீரர் வின்செண்ட் அபுபக்கர் பிரான்ஸ் அணித் தற்காப்பு ஆட்டக்காரர் களின் கவனமின்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கோல் போட்டார்.

இதனை அடுத்து, பிரான்ஸ் தாக்குதல் மேல் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், பிரான்ஸ் தந்த நெருக்குதலுக்குச் சிறிதும் வளைந்து கொடுக்காமல் கெமரூன் பிடிவாதமாக நின்றது. 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்பதற்கு ஏற்றாற்போல் பிரான்சின் விடாமுயற்சி பலன் கண்டது. முற்பாதி ஆட்டம் முடிவதற்குள் ஆர்சனல் நட்சத்திரம் ஒலிவியே ஜிரூ பிரான்சின் இரண்டாவது கோலைப் போட்டார். இடைவேளையின்போது 2-1 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி சில நிமிடங் களில் ஆட்டத்தைச் சமன் செய்ய கெமரூனுக்குப் பொன்னான வாய்ப்பு கிட்டியது.

ரெலியன் எட்ஜூ அனுப்பிய பந்து வலை நோக்கிச் சென்றது. வலையைப் பதம் பார்க்கவிருந்த பந்தை ஜிரூ சரியான நேரத்தில் குறுக்கிட்டு, தடுத்து வெளியேற்றினார். இந்நிலையில், வெற்றியை உறுதி செய்ய பிரான்ஸ் பல தாக்குதல் களை நடத்தியது. பிரான்சின் கோல் முயற்சிகளை கெமரூன் கோல்காப்பாளர் ஒன்டோவா முறியடித்தார். இப்படி ஒருமுறை பிரான்சின் கோல் முயற்சியைத் தடுத்து நிறுத்திய ஒன்டோவா, சிறிதும் தாமதிக்காமல் பந்தைத் தமது அணியின் தாக்குதல் ஆட்டக்காரர்களிடம் அனுப்பினார். பிரான்ஸ் ஆட்டக்காரர்கள் நிலை மையைப் புரிந்துகொண்டு சுதாரித் துக்கொள்வதற்குள் கெமரூனின் இரண்டாவது கோல் புகுந்தது.

இதனைத் தொடர்ந்து ஆட்டம் சமநிலையில் முடியும் என்று முடிவு கட்டியவர்களுக்கு ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டது. பிரான்ஸ் குழுவுக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைக்க, அதை வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரருமான டிமிட்ரி பாயே எடுத்தார். பந்தை அழகாக வளைத்து வலைக்குள் அனுப் பினார் பாயே. கெமரூன் கோல்காப்பாளரால் அதைத் தடுக்க இயலவில்லை. விளையாட்டரங்கம் அளவில்லா மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் மூழ்கியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!