செங்காங்கில் உடற்குறையுள்ளோருக்கான முதல் நிபுணத்துவ விளையாட்டு மையம் அதிகாரபூர்வத் திறப்பு

உடற்குறையுள்ளோருக்கான முதல் நிபுணத்துவ விளையாட்டு மையம் ஏக்டிவ் எஸ்ஜி செங்காங் விளையாட்டு மையத்தில் நேற்றுப் பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. மையத்தை கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ திறந்து வைத்தார். இந்த மையத்தைப் போல் குறைந்தது ஐந்து மையங்கள் நாடெங்கும் திறக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் குவீன்ஸ்டவுன், தோ பாயோ, ஜூரோங் வெஸ்ட் விளையாட்டு மையங்களில் இத்தகு மையங்கள் அமைக்கப்படும்.

இந்த மையங்களில் உடற் குறையுள்ளோருக்கு ஏதுவான வசதிகளும் செய்து தரப்படும்.

உடற்குறையுள்ளோருக்கு ஏதுவான சூழலில் அவர்கள் விளை யாட்டுகளைக் கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் நீச்சல், மேசைப் பந்து போன்ற விளையாட்டுகள் அறி முகப்படுத்தப்படும். இம்மாதத் திலிருந்து உடற்குறையுள் ளோருக்கு நீச்சல் வகுப்புகள் நடத்தப்படும்.

கால்களை இழந்த 51 வயது டான் வீ பூன்னை சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டு சரிவுப் பாதை வாயிலாக நீச்சல் குளத்துக்கு அழைத்துச் செல்ல உதவும் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடமிருந்து மூன்றாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லிவர்பூலின் இரண்டாவது கோலை அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ரொபேர்ட்டோ ஃபர்மினோ (இடமிருந்து மூன்றாவது). படம்: ராய்ட்டர்ஸ்

19 Aug 2019

இங்கிலிஷ் பிரிமியர் லீக்: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த லிவர்பூல், ஆர்சனல்

சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் ஆக வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராக கருதப்படும் அவ்ரமோவிச்.

19 Aug 2019

ஹோம் யுனைடெட் குழுவிலிருந்து பதவி விலகிய அவ்ரமோவிச்