செர்பியாவிடம் வீழ்ந்த இஸ்ரேல்

அனைத்துலக நட்புமுறை காற் பந்தாட்டம் ஒன்றில் செர்பியாவிடம் வீழ்ந்தது இஸ்ரேல். இஸ்ரேலின் புதிய பயிற்றுவிப் பாளராக எலிசா லெவி பொறுப் பேற்றிருக்கும் நிலையில், இந்தத் தோல்வி குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐரோப்பிய சாம்பியன்‌ஷிப் காற்பந்தாட்டத் திற்கு இஸ்ரேல் தகுதி பெறாத நிலையில், அதன் முந்தைய பயிற்றுவிப்பாளரான ஏலி குட்மேன் நீக்கப்பட்டடார். அதன்பிறகு, யூரோ 2020 காற்பந்து தொடருக்கு இஸ்ரேலை தயார்படுத்துவதற்காக லெவி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 1970ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கிண்ணக் காற் பந்துக்கு தகுதிபெறும் முனைப் போடு உள்ள இஸ்ரேல், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலகக் கிண்ணக் காற்பந்தாட்ட தகுதிச் சுற்று ஆட்டத்தில் இத் தாலியை எதிர்கொள்ளவுள்ளது. அதற்குள், இஸ்ரேலின் பயிற்று விப்பாளர் லெவி தனது அணியை வெற்றிக்குத் தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் 3-1 என செர்பியாவிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.

செர்பிய வீரரும் செல்சி குழுவின் தற்காப்பு ஆட்டக்காரரு மான இவனோவிச், முதன் முறையாக அனைத்துலக ஆட்டத்தில் விளையாடும் இஸ்ரேலின் கோல் காப்பாளரான டுட்டு கோரேஷை தாண்டி பந்தை எதிரணியின் வலைக்குள் புகுத்தினார். 33வது நிமிடத்தில் விழுந்த இந்த கோலை 49வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி சமன் செய்தார் இஸ்ரேலின் புதிய அணித் தலைவர் எரன் ஜார்வி. அதன்பிறகு, செர்பிய வீரர்கள் 74, 88வது நிமிடத்தில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டதால் அக்குழு வெற்றி பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!