கிரிக்கெட் வாரியத்தின் விளம்பரத்திற்கு கண்டனம்

மும்பை: பயிற்­சி­யா­ள­ருக்கு இந்தி தெரிந்­தி­ருத்­தல் விரும்பத்தக்கது என்ற இந்திய கிரிக்­கெட் வாரி­யத்­தின் விளம்ப­ரத்­திற்கு கண்ட­னங்கள் எழுந்­துள்­ளன. இது குறித்து விளக்­கம் அளித்­துள்­ளது இந்திய கிரிக்­கெட் வாரியம். இந்திய அணிக்­குத் தலைமைப் பயிற்­சி­யா­ளர் பணிக்கு விண்­ணப்­பங்களை வர­வேற்­கும் கிரிக்­கெட் வாரியம் அதற்­கான விளம்ப­ரத்தை­யும் இரு தினங்களுக்கு முன் வெளி­யிட்டது. அதில் இந்தி, இதர இந்திய மொழிகள் தெரிந்­தி­ருப்­பது விரும் பத்தக்கது என கூறப்பட்டிருந் தது.

இந்திய மொழிகள் என்று பொது­வா­கப் போடாமல் அது என்ன இந்தி எனக் குறிப்பாக போடுவது என்று சமூக வலைத­ ­ளங்களில் பிசிசிஐ குறித்து விமர்­ச­னங்கள் எழத் தொடங்­கின. இதை­ய­டுத்­துப் வாரியம் அளித்­துள்ள விளக்­கத்­தில், "வீரர்­களி­டம் தனது கருத்தை சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய திறமை­யு­டன் கூடிய தலைமைப் பயிற்­சி­யா­ளரைத் தேடி வரு­கி­றோம். "இந்திய மொழி ஒன்றைத் தெரிந்­தி­ருந்தால் அது பயன் அளிக்கக்கூடியது என்­று­தான் சொல்­லி­யுள்­ளோம். ஆனால், இந்திய மொழி ஒன்று கட்­டா­யம் தெரிந்­தி­ருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்­ல­வில்லை," என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அது புதிதாக வெளி­யிட்­டுள்ள அறி­விப்­பில் இந்தி என்ற வார்த்தையை­யும் நீக்­கி­ யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!