கோல் மழை பொழிந்த ஸ்பெயின்

சால்ஸ்பர்க்: ஐரோப்பிய கிண்ண காற்பந்து வெற்றியாளர் விருதை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இருக்கும் ஸ்பெயின் நட்புமுறை ஆட்டமொன்றில் நேற்று அதிகாலை தென் கொரியாவை புரட்டி எடுத்தது. ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போட்டியில் அல்வாரோ மொராட்டா, நோலிட்டோ இருவரும் தலா 2 கோல்கள் போட்டு 6=1 என தென் கொரியாவை திக்குமுக்காட வைத்தனர்.

ஸ்பெயினின் ரியால் மட்ரிட், அட்லெட்டிக்கோ மட்ரிட் குழுக்களில் உள்ள அந்நாட்டு தேசிய காற்பந்து வீரர்கள் சென்ற சனிக்கிழமை சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் இறுதிப் போட்டியில் மோதியதால், ஸ்பெயின் நிர்வாகி அவர்களுக்கு இந்த விளையாட்டில் இருந்து ஓய்வு கொடுத்தார். ஆனால் இது ஒரு பொருட்டே அல்ல என்று நிரூபிக்கும் வகை யில் விளையாடிய ஸ்பெயின் அணி முதல் பாதி ஆட்டம் முடியும் முன்னரே மூன்று கோல்கள் போட்டு தென் கொரியாவை திணறடித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்