வியட்னாமிடம் வீழ்ந்த இளம் சிங்கங்கள்

மலாக்கா: இரண்டு கோல் முன்னிலையைக் கட்டிக்காக்க தவறிய 21 வயதுக்குட்பட் டோருக்கான சிங்கப்பூர் காற்பந்துக் குழு, நேஷன்ஸ் கிண்ணத்தின் மூன்றாவது இடத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. வியட்னாமுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிங்கப்பூர் 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஏடம் சுவாண்டி சிங்கப்பூரின் முதல் கோலைப் போட்டார். அதனைத் தொடர்ந்து ஆட்டத் தின் 51வது நிமிடத்தில் சிங்கப் பூருக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த பொன் னான வாய்ப்பைப் பயன்படுத்திப் பந்தை வலைக்குள் சேர்த்தார் ஹ‌ஷிம் ஹசான். இனி வெற்றி நிச்சயம் என்று மிகுந்த நம்பிக் கையுடன் இருந்த சிங்கப்பூர் அணியினருக்கு வியட்னாம் அதிர்ச்சி வைத்தியம் தந்தது. சிங்கப்பூரின் இரண்டாவது கோல் புகுந்த அடுத்த நான்கு நிமிடங்களில் சுவாண்டியின் தப்பாட்டம் காரணமாக வியட்னா முக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் வியட்னாம் கோல் போட்டது. ஆட்டம் முடிய வினாடிகளே இருந்தபோது வியட்னாம் ஆட்டத்தைச் சமன் செய்து சிங்கப்பூரை உறைய வைத்தது. கூடுதல் நேரம் வழங்கப் படாத நிலையில் ‘பெனால்டி ‌ஷுட்அவுட்’ நடத்தப்பட்டது. இதில் வியட்னாம் 5-=4 எனும் கோல் கணக்கில் வென்றது.