தாக்குப்பிடிக்க தவறிய சிங்கங்கள்

பா. பாலசுப்பிரமணியம்

'ஏஒய்ஏ பேங்க்' கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் முழுவதும் சிங்கப்பூர் சிங்கங்கள் போராடின. ஆனால் கூடுதல் நேரத்தில் சோர்வடைந்த சிங்கங்களைச் சூரையாடியது வியட்னாம் குழு. யங்கூனில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் குழு வியட்னாமிடம் 0=3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 91வது, 99வது, 114வது நிமிடங்களில் மூன்று கோல்களை போட்ட வியட்னாம் குழுவின் தற்காப்பு அரணைத் தகர்க்க சிங்கப்பூர் சிரமப்பட்டது. சிங்கப்பூர் ஆட்டக்காரரான சப்ஃவான் பஹாருதீனுக்கு வந்து சேர்ந்த அனைத்து கோல் வாய்ப்புகளையும் முறியடிக்க தயாராக இருந்தனர் பம்பரம்போல் திடலையே சுழன்று வந்த வியட்னாம் தற்காப்பு ஆட்டக் காரர்கள்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு தரப்பினரும் எந்த கோலும் போடவில்லை. ஆட்டத்தின் 74வது நிமிடத்தில், சப்ஃவான் கோல் வலையை நோக்கி தலையால் முட்டிய பந்து வெற்றியைத் தேடித் தந்திருக்கும். ஆனால் தக்க நேரத்தில் அந்த பந்து வலைக்குள் போவதைத் தடுத்தார் வியட்னாம் தற்காப்பு ஆட்டக்காரர். ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப் பாளர் வி. சுந்தரமூர்த்தி, 'சிங்கப்பூர் வீரர்கள் வியட் னாமுக்கு ஈடுகொடுத்து விளை யாடினர்' என்று குறிப்பிட்டார். ஆனால், 'கூடுதல் நேரத்தில் கவனம் இழந்த சிங்கங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டது' என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!