தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்த ஆஸி. அணி

கயானா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் துள்ளது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா மூன்று முறை மோத வேண்டும். நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றா வது லீக் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. பூவா தலையாவில் வென்ற தென் னாப்பிரிக்கா அணி முதலில் பந்தடித்தது.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா திணறியது. 112 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் டுகளை அது இழந்தது. பெஹர்தின் ஆட்டத்தால் தென் னாப்பிரிக்கா 150 ஓட்டங்களைக் கடந்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் டுகளுக்கு 189 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பெஹர்தின் 62 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் விக்கெட் சாய்ந்துவிட்டது என்று நடுவரிடம் தென்னாப்பிரிக்க அணியின் தபிரேஸ் ஷம்சி (நடுவில்) முறையிடுகிறார். அவருடன் சேர்ந்த மற்ற தென்னாப்பிரிக்க வீரர்களும் முறையிடுகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி

21 Mar 2019

சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா