காலிறுதியில் கொலம்பியா; நெருங்கி வரும் அமெரிக்கா

பெசடேனா: கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் காலி றுதிக்குத் தகுதி பெறும் முதல் குழு என்னும் பெருமையை கொலம்பியா தனக்குச் சொந்த மாக்கிக் கொண்டுள்ளது. பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அது 2-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. பராகுவேவுக்கு எதிரான இந்த 'ஏ' பிரிவு ஆட்டத்தில் கொலம்பி யாவின் வெற்றிக்கு கார்லோஸ் பக்கா, ஜேம்ஸ் ரோட்ரிகு வேஸ் ஆகியோரின் கோல்கள் வித்தி ட்டன. ஏசி மிலானுக்கும் விளை யாடி வரும் பக்கா ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கோல் போட்டார்.

அவர் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது. முன்னிலை பெற்ற குதூகலத்துடன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய கொலம்பியா பிற்பாதியில் தனது இரண்டாவது கோலைப் போட்டது. இம்முறை ரியால் மட்ரிட் குழுவின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகுவேஸ் அனுப்பிய பந்து பராகுவே கோல்காப்பாளரைக் கடந்து சென்று கோலானது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் விக்டர் ஆயாலா மூலம் பராகுவே கோல் போட்டபோதிலும் அதனால் இறுதி வரை ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போனது. 'ஏ' பிரிவில் இதுவரை ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாத கொலம்பியா வாரயிறுதி யில் கோஸ்டா ரிக்காவைச் சந்திக்கிறது. முதல் ஆட்டத்தில் உபசரணை நாடான அமெரிக் காவை கொலம்பியா 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பராகுவே கோல்காப்பாளர் ஜுஸ்டோ வில்லாரைப் (வலது) புயல் வேகத்தில் கடந்து செல்லும்கொலம்பியாவின் கார்லோஸ் பக்கா (நடுவில்). படம் ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!