எஸ்டோனியாவைப் பந்தாடிய போர்ச்சுகல்

லிஸ்பன்: ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியில் களமிறங்க போர்ச்சுகல் குழு வெற்றிக் களிப்போடு பிரான்சுக்குச் செல் கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி பயிற்சி ஆட்டத்தில் எஸ்டோனியாவை எதிர்கொண்ட போர்ச்சுகல், கோல் போடும் தனது அபாரத் திறனை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வந்த போர்ச்சுகல் 7=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோல் மழை பொழிந்து வெற்றியை ருசித்திருக்கும் போர்ச்சுகலின் ஆட்டக் காரர்களின் ரத்த நாளங்களில் புத்துணர்ச்சி பாய்ந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியில் இனி எந்தக் குழுவை எதிர் கொண்டாலும் வெற்றி பெறலாம் என்ற உத்வேகத்துடன் போர்ச்சுகல் ஆட்டக் காரர்கள் இருப்பது இயல்புதான்.

எஸ்டோனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களைப் போட்டார். அவருக்குக் காயம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இடைவேளைக்குப் பிறகு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.2016-06-10 05:50:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’