பிற்பாதி ஆட்டத்தில் களமிறங்கி ‘ஹாட்ரிக்’ போட்ட மெஸ்சி

சிக்காகோ: கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் பனாமா வுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று கோல்களைப் போட்டு அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி வித்திட்டார். ஆட்டத்தின் பிற்பாதியில், குறிப்பாகச் சொல்லப்போனால் 60வது நிமிடத்தில் களமிறங்கிய மெஸ்சி, மூன்று கோல்களைப் போட்டது குறிப்பிடத்தக்கது.

68வது நிமிடம், 78வது நிமிடம் மற்றும் 87வது நிமிடங்களில் கோல் அடித்த மெஸ்சியைத் தடுத்து நிறுத்த முடியாமல் பனாமா ஆட்டக்காரர்கள் திண்டாடினர். இறுதியில் 5-0 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணியின் மற்ற இரு கோல்களை நிக்கலஸ் ஓடாமென்டி (7வது நிமிடம்), செர்கியோ அகுவேரோ (90வது நிமிடம்) ஆகியோர் புகுத்தினர். இறுதிவரை பனாமா அணியால் ஒரு கோல்கூட போட முடியாமல் போனது. இந்த வெற்றி மூலம் அர்ஜெண் டினா காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-1 எனும் கோல் கணக்கில் சிலியைத் தோற்கடித்தது. இரண்டு வெற்றி களைப் பதிவு செய்துள்ள அர்ஜெண்டினா 'நாக்அவுட்' சுற்றை எட்டியுள்ளது. தனது இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் பொலிவியாவை அது சந்திக் கிறது. பனாமா அணி இப்போட்டியில் முதல்முறையாக தோல்வியைத் தழுவியுள்ளது. முதல் ஆட்டத்தில் 2-1 எனும் கணக்கில் அது பொலிவியாவை வீழ்த்தியது. பனாமா தனது அடுத்த ஆட்டத் தில் சிலியை எதிர்கொள்கிறது.

தமது மூன்றாவது கோலைப் போட்டு 'ஹாட்ரிக்' சாதனையைப் படைக்க விரைந்து செல்லும் மெஸ்சி (இடது), தமது அபாரக் காற்பந்துத் திறனைப் பயன்படுத்தி தம்மை தடுக்க முயலும் பனாமா ஆட்டக்காரரை எளிதில் கடந்து செல்கிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!