ரூனியின் மாற்றம் காரியத்தை கெடுத்தது

மார்சே: நேற்று அதிகாலை இங்கிலாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்ற யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் வெயின் ரூனியை மாற்றியது இங்கிலாந்து வெற்றி பெற முடியாத நிலைக்கு வழி வகுத்துள்ளதாக காற்பந்து விமர்சகர்கள் காட்ட முடன் கூறுகின்றனர். ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத் தில் ஆட்டநாயகனாக மத்திய திடல் பகுதியிலிருந்து சக வீரர்களுக்கு பந்தை லாவகமாக அனுப்பி இங்கிலாந்து விளை யாட்டுக்கு உயிரூட்டி வந்த ரூனியை ஒரு கோல் முன்னிலை பெற்றபோது மாற்றி அவருக்கு பதிலாக ஜேக் வில்‌ஷியர் என்ற வீரரைக் களமிறக்கினார் இங் கிலாந்து நிர்வாகியான ரோய் ஹோட்சன்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் ரஷ்ய விளையாட்டாளர்களின் கை ஓங்கிய நிலையில் இங்கிலாந்து அணியின் தலைவரும் அந்த அணியின் மிக அனுபவம் வாய்ந்த வீரருமான ரூனியை மாற்றியதா லேயே இறுதியில் ரஷ்யா தன் பங்குக்கு ஒரு கோல் போட்டு ஆட்டம் 1=1 என்று சமநிலையில் முடிந்ததற்குக் காரணம் என்பது இவர்களின் கருத்து. அது மட்டு மில்லாமல் ரூனி அற்புதமாக ரஷ்ய கோல் வலையை நோக்கி அடித்த பந்தை ரஷ்ய கோல்காப்பாளர் ரால் தடுத்து நிறுத்தியிராவிட்டால் ரூனியின் முயற்சி கோலில் முடிந் திருக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!