இங்கிலாந்து- ரஷ்ய ரசிகர்கள் மோதல்

யூரோ 2016 காற்பந்து போட்டியில் வெற்றி தோல்வியின்றி முடிந்த இங்கிலாந்து, ரஷ்யா ஆட்டத் திற்குப்பிறகு வன்முறை வெடித் தது. இரு அணிகளும் முதல் போட்டியில் மோதிய முதல் நாளி லேயே இங்கிலாந்து ரசிகர்கள் போலிசாருடனும் எதிரணி ஆதர வாளர்களுடனும் கைகலப்பில் ஈடு பட்டனர்.

பிரெஞ்சு துறைமுக நகரில் இரண்டு இரவுகளாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு வன்முறை மூண்டது. இதனால் மூன்றாவது நாளாக பிரெஞ்சு போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் நீரைப் பாய்ச்சியும் ரசிகர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் ஒரு பிரிட்டிஷ் நாட்டவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டதாக போலிசார் கூறினர். இங்கிலாந்தும் ரஷ்யாவும் மோதிய ஆட்டம் தலா ஒரு கோலு டன் சமனில் முடிந்ததும் அரங்கத் திலேயே இரு தரப்பு ரசிகர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். சிலர் தடுப்புகளையும் மீறி தாண்டியதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து ரசிகர் கள் அச்சத்தில் தடுப்புகள் மீது ஏறியதாக நேரில் பார்த்த பிபிசி செய்தியாளர் ஒருவர் குறிப் பிட்டார்.

சமனில் முடிந்த இங்கிலாந்து, ரஷ்ய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மார்சேயில் ரசிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’