கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது அமெரிக்கா

'கோப்பா அமெரிக்கா' காற்பந்து இறுதிச் சுற்றுப் போட்டியை ஏற்று நடத்தும் அமெரிக்கா ஒருவழியாக அப்போட்டித் தொடரின் கால் இறுதிப் போட் டிக்குத் தகுதி பெற்று விட்டது. அதுவும் தன்னைக் கடுமை யாக எதிர்த்து ஆடிய பராகு வேயை 1-=0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு அத் தகுதியைப் பெற்றது. சனிக்கிழமை இரவு பென் சில்வேனியா லிங்கன் திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே வெற்றியைச் சுவைத்திட பராகுவே கடுமை யாகப் போராடியது.

பராகுவே ஆட்டக்காரர்க ளின் தாக்குதல்களை அமெரிக் கக் குழுவின் கோல் தற்காப்பா ளர் பிராட் குஸான் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார். இப்படி இருக்கையில் ஆட் டத்தின் 27வது நிமிடத்தில் கிளிண்ட் டெம்சி போட்ட கோலால் அமெரிக்கா முன் னணி வகித்தது. இது டெம்சி போட்ட 51வது அனைத்துலக போட்டி கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கோலால் சிறிதும் மனம் தளராது தொடர் தாக்கு தல்களைத் தொடுத்தது பரா குவே.

முற்பாதி ஆட்டம் முடிய சில வினாடிகளே எஞ்சியிருந்த வேளையில் பராகுவேயின் டேரியோ லெஸ்கானோ பந்தை கொண்டு சென்று கோலாக்க முயன்றார். ஆனால் அமெரிக்காவின் கோல் தற்காப்பாளர் குஸான் அதைக் காலால் தடுத்து பந்தை வெளியே அனுப்பினார். இடைவேளைக்குப் பிறகு, பிற் பாதி ஆட்டம் தொடங்கியவுடனேயே அமெரிக்காவின் தற்காப்பு ஆட்டக் காரர் டிஆண்ட்ரே யெட்லின் ஒரு நிமிடத்துக்குள் இரண்டு முறை முரட்டுத் தனமாக ஆடியதால், சிலியின் நடுவர் ஜூலியோ பஸ்கு னான் அவருக்கு இரண்டு மஞ்சள் அட்டை, ஒரு சிவப்பு அட்டை காண்பித்து, யெட்லினை ஆட்டத்தி லிருந்து வெளியேற்றினார்.

அமெரிக்காவின் தாக்குதல் ஆட்டக்காரர் கிளிண்ட் டெம்ப்சி (நீலச் சீருடை) பராகுவே தற்காப்பு ஆட்டக்காரர் களைக் கடந்து பந்தைக் கொண்டு செல்கிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!